மூன்று ஆண்டுகளாக கோமாவிலிருக்கும் இளவரசி: கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி
தாய்லாந்து நாட்டின் இளவரசி ஒருவர் மூன்று ஆண்டுகளாக கோமாவிலிருக்கும் நிலையில், தற்போது அவருக்கு மோசமான தொற்று ஒன்று ஏற்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளாக கோமாவிலிருக்கும் இளவரசி
தாய்லாந்து மன்னரான வஜிரலோங்கார்னுடைய மூத்த மகளான இளவரசி பஜ்ரகிட்டியபா மஹிடோல் (Bajrakitiyabha Mahidol, 46), 2022ஆம் ஆண்டு, தனது நாய்களை போட்டி ஒன்றிற்காக தயார் செய்துகொண்டிருந்தபோது நிலைகுலைந்து சரிந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் கோமா நிலைக்குச் சென்றார், மூன்று ஆண்டுகளாக அவர் கோமா நிலையிலேயேதான் இருக்கிறார்.
கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி
மக்களால் அன்பாக இளவரசி பா என அழைக்கப்படும் பஜ்ரகிட்டியபாவுக்கு தற்போது இரத்தத்தில் தொற்று உருவாகியுள்ளதாக அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் குழு ஒன்றை அவரை தீவிரமாக கண்காணித்துவரும் நிலையில், இளவரசிக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகவும், அவரது சுவாசம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை சீராக வைத்துக்கொள்ள மருந்துகள் கொடுக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளவரசி பஜ்ரகிட்டியபா, அமெரிக்க பல்கலைகள் இரண்டில் சட்டத்தில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர் ஆவார்.
அத்துடன், 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, ஆஸ்திரியா நாட்டுக்கான தாய்லாந்து தூதராகவும் பணியாற்றியவர் இளவரசி பஜ்ரகிட்டியபா.
மேலும், மன்னரின் தனிப்பட்ட பாதுகாவலர்களில் மூத்த அதிகாரியாகவும் செயல்பட்டவர் அவர்.
மன்னர் வஜிரலோங்கார்னுக்கு அடுத்தபடியாக இளவரசி பஜ்ரகிட்டியபாதான் நாட்டை ஆட்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்த செய்தி மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |