இவர் இளவரசி மட்டுமல்ல., தொழிலதிபர், விளையாட்டு வீராங்கனை., அவரது சொத்து மதிப்பு.?
தாய்லாந்தின் இளவரசி சிறீவண்ணவாரி நரிரதன ராஜகன்யா (Sirivannavari Nariratana Rajakanya) தனது அரச பட்டத்திற்கு பெயர் பெற்றவர் மட்டுமல்ல, ஆடம்பர ஆடை வடிவமைப்பாளரும் ஆவார். அவர், குதிரை ரெஸ் (equestrian) மற்றும் பூப்பந்து (badminton) வீராங்கனையாக விளையாட்டுகளில் போட்டியிட்டுள்ளார்.
தாய்லாந்து இளவரசி சிறிவண்ணவாரி நரிரதன ராஜகன்யாவின் சொத்து மதிப்பு, வணிகம் மற்றும் அவரது ஆர்வங்கள் உட்பட அனைத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சிறீவண்ணவாரி நாரிரதன ராஜகன்யா, மன்னர் வஜிரலோங்கோர்னின் முன்னாள் மனைவி சுஜாரினி விவச்சரவோங்ஸே என்பவரின் ஒரே மகள் ஆவார்.
இளவரசி அந்தஸ்து
சிறீவண்ணவாரி ஜனவரி 8, 1987-ல் பிறந்தார். அவருக்கு நான்கு உடன்பிறப்புகள் உள்ளனர். சிறிவண்ணவாரியின் பெற்றோரின் விவாகரத்தைத் தொடர்ந்து, சிறிவண்ணவாரியின் தாயார் பிரித்தானியாவுக்கு சென்றார், ஆனால் பின்னர் அவரது தந்தை சிறீவண்ணவாரியைக் கடத்தி தாய்லாந்துக்குத் திரும்பும்படி உத்தரவிட்டார்.
ரூ.464 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழக கிரிக்கெட் வீரர்., ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் முதலீடு
சிறீவண்ணவாரி சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றார் மற்றும் பாரிஸில் உள்ள எகோல் டி லா சாம்ப்ரே சிண்டிகேல் டி லா கோட்டூர் பாரிசியென்னில் வடிவமைப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஜூன் 15, 2005 அன்று அவரது தாத்தா மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் அரச கட்டளையால் அவர் இளவரசி அந்தஸ்துக்கு முன்னேறினார்.
பேட்மிண்டன் வீராங்கனை., ஃபேஷன் டிசைனர்
சிறீவண்ணவாரி இளவரசி மட்டுமின்றி பிற துறைகளிலும் சிறந்து விளங்குகிறார். 2005-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தாய்லாந்து அணிக்காக பேட்மிண்டனில் பங்கேற்று, அணியில் தங்கம் வென்றார்.
சிறீவண்ணவாரி ஃபேஷனில் அதிக ஆர்வம் கொண்டவர். 2007-ஆம் ஆண்டில் பிரபல பிரெஞ்சு ஃபேஷன் டெசினரான பியர் பால்மெய்னை பாரிஸில் தனது ஃபேஷன் ஷோவை வழங்க அழைத்தார்.
அவரது முதல் பாரிஸ் கலெக்ஷன் Presence of the Past என்று பெயரிடப்பட்டது, இது அவரது அரச பாட்டியின் நினைவுகளை ஈர்த்தது மற்றும் பாரம்பரிய தாய் உடையின் நவீன பார்வையை வழங்கியது. அவர் Sirivannavari என்ற பேஷன் பிராண்ட் வைத்திருக்கிறார்.
குதிரை பந்தய வீராங்கனை., ராணுவ அதிகாரி
இளவரசி சிறீவண்ணவாரி குதிரை பந்தைய வீராங்கனை ஆவார். அவர் தனது ஒன்பது வயதில் குதிரை சவாரி செய்யத் தொடங்கினார். அவர் பிரான்சில் சர்வதேச மானிட்யூர் டி ஈக்விடேஷனில், Le Cadre Noir de Saumur இல் பயிற்சி பெற்றார். அவர் 2013 மற்றும் 2017 SEA விளையாட்டுகளில் Thai equestrian sports team-ன் உறுப்பினராகப் போட்டியிட்டார்.
கோடிக்கணக்கான சொத்தில் பாதிக்கு மேல் தானம்., ரூ.760 சம்பளத்தில் தொடங்கி ரூ. 4,00,000 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தொழிலதிபர்
சிறீவண்ணவாரி ராயல் தாய் இராணுவத்தில் (Royal Thai Army) மேஜர் ஜெனரல் பதவியில் நிபுணரும் ஆவார். சிறீவண்ணவாரி 2-வது குதிரைப்படை பிரிவின் ராயல் ஸ்டேபிள் யூனிட், கிங்ஸ் கார்ட், ராயல் தாய் இராணுவத்தின் தலைவராக இருந்தார்.
சொத்து மதிப்பு
ரூ. 367 கோடி (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.1450 கோடி) சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார இளவரசிகளில் சிறீவண்ணவாரியும் உள்ளார். சிறீவண்ணவாரி ஒரு சேகரிப்பாளரும் ஆவார் மற்றும் பல வைரங்கள், மரகதங்கள் மற்றும் பிற ரத்தினங்களை சேகரிப்பில் வைத்துள்ளார்.
சிறீவண்ணவாரியின் தந்தை, தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன் உலகின் பணக்கார மன்னர் ஆவார், அவரது சொத்து மதிப்பு 30 பில்லியன் டொலர் முதல் 70 பில்லியன் டொலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Kingdom of Thailand, Sirivannavari Fashion Brand, Thailand Princess Sirivannavari Nariratana Rajakanya, Badminton, Sirivannavari sports, Thailand Princess Sirivannavari Net Worth