தனி ஆளாக போர் விமானம் ஒன்றை இயக்கிய நாடொன்றின் ராணி
Thailand queen makes first solo flight in Gripen fighter jet: தாய்லாந்து நாட்டின் ராணி, தனி ஆளாக போர் விமானம் ஒன்றை இயக்கியுள்ளார்.
தாய்லாந்து நாட்டின் ராணியான சுதிடா, தனி ஆளாக போர் விமானம் ஒன்றை இயக்கியுள்ளார்.

தனி ஆளாக போர் விமானம் ஒன்றை இயக்கிய ராணி
முறைப்படி கல்வியும் பயின்று, பயிற்சி பெற்றபின்னரே ராணி சுதிடா (48) இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
🇹🇭 VIDEO: Her Majesty Queen Suthida conducting her first solo flight in Saab #Gripen C. #RTAF Wing 7, Surat Thani, October 8th. 📷RTAF #military #aviation https://t.co/s8y5WYgFk7
— Gripen News (@GripenNews) October 8, 2026
நேற்று, தன் கணவரும் மன்னருமான மஹா வஜ்ரகோன் மேற்பார்வையில் இந்த பயணத்தை மேற்கொண்டார் ராணி சுதிடா.

அவர் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து ராணிக்கு பூங்கொத்து ஒன்றை வழங்கிப் பாராட்டினார் மன்னர்.
போர் விமானம் ஒன்றை தனி ஆளாக இயக்கியதைத் தொடர்ந்து, நாட்டிலேயே முதல் பெண் Gripen விமானி என்னும் பெருமையும் ராணி சுதிடாவுக்குக் கிடைத்துள்ளது.
ராணி சுதிடா, ஏற்கனவே 1,188.48 மணி நேரம் பல்வேறு விமானங்கள் மூலம் பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.