லொட்டரியில் இழக்கும் பணத்தை ஓய்வூதியமாக வழங்கும் ஆசிய நாடு
லொட்டரி வாங்கி ஒரு சிலர் பரிசு வென்று அதன் மூலம் அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறினாலும், பெரும்பாலானோர் பரிசு கிடைக்காமல் லொட்டரியில் பணத்தை இழக்கின்றனர்.
ஓய்வூதியமாகும் லொட்டரி பணம்
இந்நிலையில் லொட்டரியில் இழக்கும் பணத்தின் ஒரு பகுதியை ஓய்வூதியமாக வழங்க தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டமானது, பாவோ டாங் செயலி மூலம் வாங்கப்பட்ட லொட்டரிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். இதன் மூலம் இழந்த பணம், துல்லியமாக அந்த நபரின் தனிப்பட்ட சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
தனிநபர் 55 வயதை அடைந்தவுடன் இந்த பணத்தை எடுக்க அனுமதிக்கப்படும். கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க முடியும்.
4 மாதத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கு முறையாக பெயரிடப்படவில்லை.
அரசு லொட்டரி அலுவலகத்திற்கு (GLO) தற்போது ஒதுக்கப்பட்டுள்ள வருவாயில் 17% பங்கிலிருந்து இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும்.
இது சூதாட்டத்தை ஊக்குவிப்பதற்கு இல்லை. மாறாக சேமிப்பை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |