சிவன் மலை கோவிலின் உத்தரவு பெட்டியில் தாலி... பக்தரின் கனவில் வந்த முருகன்! இதற்கு என்ன பலன் தெரியுமா?
தமிழகத்தில் இருக்கும் சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவுப் பெட்டியில் இந்த முறை அம்மையர் படம் தாலி வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
மலை மீது உள்ள இந்த கோவில்ல் ஆண்டவன் உத்தரவுப் பெட்டி என்ற ஒன்று உள்ளது. இந்த உத்தரவு பெட்டியில், என்ன வைக்கப்படுகிறதோ, அது தான் அடுத்து உலகத்தில் மிக முக்கிய பேசு பொருளாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதாவது, இந்த உத்தரவு பெட்டியில் என்ன வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கனவில் வந்து தோன்றும்.
அப்படி பக்தர்கள் வந்து சொல்வது உண்மையா? என்பதற்காக அந்த கோவிலில் பூ கேட்பர்.
வெள்ளைப் பூ வந்தால், அந்த பக்தர் சொல்வது உண்மை என்று அந்த பொருளை வைத்து பூஜை செய்வர்.
அதன் படி இந்த முறை, காங்கேயம் தாலுகா முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் தோன்றிய முருகன், கைலாய மலையில் அம்மையப்பருடன் விநாயகரும், முருகரும் இருப்பது போன்றும், இருபக்கவாட்டிலும் அகோர வீர பத்ரர், ஒரு தெய்வ ஜாதகம், ஒரு திருமாங்கல்யம், 32 ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் வைத்து பூஜிக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பக்தர் உடனடியாக அந்த கோவிலுக்கு வந்து, ஆண்டவர் தனது கனவில் வந்து கூறியதை கூறியுள்ளார்.
அதன் பின் சாமியிடம் பூ கேட்டு உத்தரவு பெற, அந்த பக்தர் கூறியது போன்று சாமி படம் தாலி வைத்து நேற்று முதல் பூஜை செய்யப்பட ஆரம்பிக்கப்பட்டது.
இது குறித்து அந்த பக்தர் கோகுல்ராஜ் கூறுகையில், உலகத்தில் அன்பு, அறம், சத்யம் ஆகிய மூன்றும் தற்போது குறைந்து விட்டது.
இந்த மூன்றையும் ஆண்டவர் மீட்கப்போகிறார். இதன் பலன் திருமண சுபகாரியங்கள் கைகூடும்
. திருமண தடை அகலும்.
சுபகாரிய நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.