தஞ்சை தமிழனை கரம்பிடித்த ஜேர்மனி பெண்! கடல் கடந்து சேர்ந்த 10 ஆண்டுகால காதல்
ஜேர்மனியைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
10 ஆண்டுகால காதல்
தமிழக மாவட்டம் தஞ்சாவூரின் கூனம்பட்டிச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் ஜேர்மனியில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். 
இவருக்கும் உடன் பணிபுரிந்த விலினா பெர்கர் என்ற ஜேர்மன் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் முறைப்படி
அதன் பின்னர் இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் காதல் குறித்து தெரிவித்துள்ளனர். அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே விக்னேஸ்வரன், விலினா ஜோடிக்கு திருமணம் முடிவானது.
இந்த நிலையில், தமிழ் முறைப்படி காதல் ஜோடி தமிழ்நாட்டில் திருமணம் செய்துகொண்டது.
இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். 
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |