சொகுசு கார்களை பரிசளித்து ஆச்சரியப்படுத்திய தஞ்சாவூர் ஓனர்.., இன்ப அதிர்ச்சியில் ஐ.டி ஊழியர்கள்
தனது நிறுவனத்தின் ஊழியர்களை உற்சாகப்படுத்த ஊழியர்களுக்கு சொகுசு கார்களை உரிமையாளர் பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் நிறுவனம்
தமிழக மாவட்டமான தஞ்சாவூரில், ஹம்சவர்தன் என்ற மென் பொறியாளர் கடந்த 2014 -ம் ஆண்டு பிபிஎஸ் என்ற பெயரில் மென் பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். 4 பேருடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது தற்போது 400 பேர் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், தனது ஊழியர்களுக்கு ஹம்சவர்தன் ஆச்சரிய பரிசை ஒன்றை அளிக்க முடிவு செய்தார். இதனால், தனது ஊழியர்களையும், குடும்பத்தினரையும் நட்சத்திர விடுதி ஒன்றுக்கு விருந்துக்கு அழைத்தார்.
சொகுசு கார்கள் பரிசு
நிறுவனம் தொடங்கிய போதிலிருந்து தன்னிடம் தற்போது வரை பணியாற்றிய 5 பெண் ஊழியர்கள், 6 ஆண் ஊழியர்கள் என 11 ஊழியர்களை தேர்வு செய்த ஹம்சவர்தன், அவர்களுக்கு ஒரு சொகுசுக் காரை பரிசாக வழங்கினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கண் கலங்கி தனது உரிமையாளருக்கு நன்றியை தெரிவித்தனர். மேலும் ஹம்சவர்தன் கூறுகையில், "வரும் ஆண்டுகளிலும் நிறுவனத்தின் உயர்வுக்கு பங்களிக்கும் ஊழியர்களுக்கு பரிசளிக்க முடிவு செய்துள்ளேன்.
அடுத்த 10 ஆண்டுகளில் டெல்டா பகுதியைச் சேர்ந்த பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே தனது லட்சியம்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |