இப்படி ஒரு சாகசமா? உறைந்த பனியில் சிக்கிய வீரரின் நிலை என்ன? வைரல் வீடியோ
தடகள வீரர் ஒருவர் செய்த சாகசத்தின் போது எதிர்பாராதவிதமாக உறைபனியில் சிக்கி வழி தவறி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
4 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தடகள வீரர் ஒருவர் உறைந்த ஏரியின் அடியில் நீச்சல் சாகசம் நிகழ்த்தும்போது வழி தவறி சென்ற சம்பவம் தொடர்புடைய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
உலகச் சாம்பியன் பட்டத்தை 4 முறை தட்டி தூக்கிய 31 வயதுடைய தடகள வீரரான போரிஸ் Boris Oravew குளிர்ந்த நீரில் தனது நீச்சல் திறமையை காட்ட முயன்றுள்ளார்.
அப்போது அவர் உறைந்த பணியில் சிக்கி கொண்டு தனக்கான வழியை மறந்து திசைமாறி சென்றுள்ளார். அதன்பின்பு Boris Oravew பனிக்கட்டியில் சிக்கி கொண்டு நீந்த முடியாமல் தவித்துள்ளார்.
Boris-யின் நிலை கண்டு அவருடைய குழுவினர்கள் பயங்கர பீதி அடைந்துள்ளார்கள். இதனையடுத்து Boris இறுதியாக தனக்கான வழியை கண்டறிந்து தான் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து சேர்ந்துள்ளார். இது தொடர்புடைய வீடியோ இணையத்தில் பயங்கர வெளியாகியுள்ளது .