Nuclear Football-னுடன் நடமாடும் புடின்: வெளியாகியுள்ள புகைப்படங்கள்
ரஷ்ய ஜனாதிபதி புடின், Nuclear Footballடன் நடமாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Nuclear Football என்பது அணு ஆயுத பிரயோகம் செய்வது தொடர்பிலான முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஒரு சூட்கேஸ் ஆகும்.
ரஷ்ய ஜனாதிபதி புடின், Nuclear Footballடன் நடமாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக அதிக அளவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத புடின், நேற்று இராணுவ பயிற்சி முகாம் ஒன்றிற்கு வருகை தந்திருந்தார்.
அப்போது, அவருடன் சீருடை அணியாத ஒரு அதிகாரி கையில் Nuclear Football என்னும் சூட்கேசுடன் காணப்படுவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் மாதம், தன் சகா ஒருவரின் இறுதிச் சடங்குக்கு புடின் சென்றிருந்தபோதும், ஒரு அதிகாரி இந்த Nuclear Footballடன் புடினை பின்தொடர்ந்ததை வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் காணமுடிகிறது.
இந்த Nuclear Football என்பது, சில முக்கிய ஆவணங்கள், மற்றும் ஒரு நாட்டின் ஜனாதிபதி நாட்டில் இல்லாமல் வேறெங்காவது இருக்கும்போது, அல்லது விமானத்தில் பறக்கும்போது அணு ஆயுதங்களை பிரயோகிப்பதற்கான உத்தரவை வழங்கும் இரகசிய குறியீடுகள் முதலானவை அடங்கிய ஒரு சூட்கேஸ் என கூறப்படுகிறது.