விமானத்தில் ஒரு சிறந்த இருக்கையை தேர்வு செய்வது எப்படி? விமான பணிப் பெண் பகிர்ந்த தகவல்: வைரலாகும் வீடியோ
விமான பணிப் பெண் ஒருவர் விமானத்தில் முன்பதிவின் போது, மிகச்சிறந்து இருக்கை எது என்பது குறித்து கூறியுள்ளார்.
துபாயின் Emirates விமானத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருபவர் Sandra Jeenie Kwon. சமூகவலைத்தள பக்கத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை கொண்ட இந்த பெண், பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
டிக் டாக் பக்கத்தில் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் விமானத்தில் மிகழ்ச்சிறந்த இருக்கை எது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில், உதாரணமாக, 52 வரிசைகள்(rows) மற்றும் ஆறு நெடுவரிசைகளைக்(columns) கொண்ட விமானத்தில் 49C, D, F மற்றும் G ஆகியவையே சிறந்த இருக்கையாக நான் கூறுவேன். விமானத்தின் பின்பக்கத்தில் இடம் கிடைப்பது கொஞ்சம் எளிது.
ஆனால், அதிலும் முன்பக்கம் மிகவும் வேகமாக நிரம்பிவிடும். இதற்கு ஒரு முக்கிய காரணம் கழிப்பறை, இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு விமானத்தில் நீங்கள் விமான இருக்கையை தேர்வு செய்ய போகிறேர்கள் என்றால், நான்கு முதல் ஐந்து வரிசைகளுக்குப் பின்னால் எடுக்க வேண்டும்.
இதன் மூலம் நீங்கள் வரிசைப்படி தேவையான உணவுகளை பெற வாய்ப்புள்ளது.
இதில் ஒரு தனிப்பட்ட விஷயம் என்னவென்றால் கழிப்பறை பயன்படுத்தும் போது, அவர்களை ஒதுங்க சொல்லும் போது சிலர் வெறுப்பதுண்டு, அதற்கு இந்த முறையை பயன்படுத்தும் போது, உங்களுக்கு அந்த பிரச்சனை வர வாய்ப்பில்லை.
எனவே என்னைப் பொறுத்தவரை இந்த 52 வரிசைகள் கொண்ட விமானத்தில் சிறந்த இருக்கை தேர்வாக நான் 49 C/D/F/G-ஐ தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.