சூட்கேசில் இருந்து மீட்கப்பட்ட திருமணமாகாத கர்ப்பிணி பெண்ணின் சடலம்! கைது செய்யப்பட்ட தம்பதி... கதறி துடிக்கும் காதலன்
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்ணின் உடல் சூட்கேசில் கிடந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரிட்டனி ஸ்மித் (28) என்ற இளம்பெண் 6 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் காணாமல் போனார்.
அவரை பொலிசார் தேடி வந்த சூழலில் நியுஸ் நதி அருகில் ஒரு பெரிய சூட்கேஸ் இருப்பதை கண்டனர். அதை திறந்து பார்த்த போது உள்ளே பிரிட்டனியின் சடலம் இருந்தது.
அவர் காணாமல் போன 4 நாட்கள் கழித்தே சடலமாக மீட்கப்பட்டார்.
திருமணமாகாத பிரிட்டனி தனது காதலன் கோடி பேஜ் உடன் வசித்து வந்திருந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாமஸ் ஜான்சன் (37) மற்றும் எமாலி கிரேஸ் (24) ஆகிய தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை இன்னும் பொலிசார் வெளியிடவில்லை.
பிரிட்டனி காதலன் பேஜ் கூறுகையில், அவள் என் இதயமாகவும், ஆத்மாவாகவும் இருந்தாள். பிரிட்டனிக்கு போதை மருந்து பழக்கம் இருந்தது.
அவளுக்கு ரகசிய வாழ்க்கையும் இருந்தது, எனக்கு உடன்படாத சில விடயங்களை பிரிட்டனி செய்து வந்தாள்.
என்னிடம் பல விடயங்களையும் மறைத்தார். கடந்த வாரம் கூட பிரிட்டனியை ஜான்சன் அழைத்து செல்ல வருவதாக அவர் செல்போனுக்கு மெசேஜ் வந்திருந்தது. அப்போது தான் நான் கடைசியாக பிரிட்டனியை நான் பார்த்தேன்.
என் உடலின் பாதி போய்விட்டது போல உணர்கிறேன் என கண்ணீருடன் கூறியுள்ளனர்.
இதனிடையில் இந்த சம்பவத்தில் முழு விபரமும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
