சூட்கேசுக்குள் இருந்த அழகிய சிறுவனின் உடல்... வெளியாகியுள்ள திடுக்கிடவைக்கும் தகவல்கள்
அமெரிக்காவிலுள்ள இண்டியானா பகுதியில், வனப்பகுதியின் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனுள் ஒரு அழகான சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பிரச்சினை என்னவென்றால், கண்டெடுக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும், இதுவரை அந்த சிறுவனின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை.
நேர்த்தியாக உடை உடுத்தப்பட்டு சூட்கேசுக்குள் அந்தச் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நிச்சயம் அந்தக் குழந்தை தானாக உள்ளே சென்றிருக்க முடியாது. ஆகவே, அவனுடைய மரணத்துக்கும் யாரோ ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்பது மட்டும் உண்மை என்று கூறும் பொலிசார், அந்த சிறுவனின் பெற்றோரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
நான்கு அடி உயரம் கொண்ட கருப்பினச் சிறுவன் என்ற ஒரு அடையாளம் மட்டுமே அவனைக் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் சிறுவனுடைய உடலில் காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், அவனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அதனால் உடலிலுள்ள தாதுக்கள் எல்லாம் வெளியேறி, உடலில் நீர்ச்சத்துக் குறைந்து அவன் உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
ஆகவே, பொலிசார் அவனது பெற்றோரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.