இன்னும் இரண்டு நிமிடங்களில் குண்டு வெடிக்கும்... சத்தமிட்டு பெண்களை கதிகலங்க வைத்த நபர்: பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம்
அமெரிக்காவில் உணவகம் ஒன்றிற்குள் நுழைந்த ஒரு இளைஞர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டியதைத் தொடர்ந்து அங்கிருந்த பெண்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மான்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள ஒரு உணவகத்துக்குள் நுழைந்த அந்த நபர், அல்லாஹூ அக்பர், இனும் இரண்டு நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கும், நான் உங்களை என்னுடன் சேர்த்துக் கொல்லப்போகிறேன், இப்போதே, இப்போதே என சத்தமிட்டுள்ளார்.
அதைக் கேட்டு, அங்கு உணவருந்திக்கொண்டிருந்த பெண்கள் சிலர் சாப்பிடுவதை விட்டு விட்டு பதறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதைக் கண்ட ஒருவர் பொலிசாருக்குத் தகவலளித்துள்ளார். ஆனால், பொலிசார் வரும்போது அந்த நபர் அங்கில்லை. ஆனால், அந்த வீடியோ இணையத்தில் நேரலையில் வெளியாக, அவர் சிக்கினார்.
அவரது பெயர் Malik Sanchez (19) என்பதும், அவர் இதுபோன்ற வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடும் ஒரு யூடியூப் பிரபலம் என்பதும் தெரியவந்தது.
ஆனாலும், அவர் போலியாக வெடிகுண்டு வைத்திருப்பதாக அப்பாவி மக்களை மிரட்டியதாக, மான்ஹாட்டன் நகர அமெரிக்க அட்டார்னியான Audrey Strauss நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனது குற்றத்தை Malik ஒப்புக்கொண்டுள்ளதையடுத்து, அவருக்கு பிப்ரவரி மாதம் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
அவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.