கனமழையால் இடிந்து விழுந்த பாலம்! வட மாநிலங்களை புரட்டி போட்ட மழை
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத மழை
வட மாநிலங்களான, உத்தரகாண்ட், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் நீர்மட்டம் இன்று காலை 11 மணியளவில் 208.57 மீட்டராக உயர்ந்தது. தற்போதைய நீர்மட்டம் அபாயக் குறியை விட மூன்று மீட்டர் உயரத்தில் உள்ளது.
யமுனைக்கு அருகில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் ஆற்று நீர் அருகிலுள்ள பகுதிகளுக்குள் நுழைந்ததால் ஆடம்பரமான சிவில் லைன்ஸ் பகுதியும் தண்ணீரில் மூழ்கியது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் மற்றும் டெல்லி சட்டசபையில் இருந்து 350 மீட்டர் தொலைவில் தண்ணீர் உள்ளது.
I traveled to My College by Metro today? River #Yamuna near Kashmiri Gate , #Delhi #YamunaFloods #yamunariver #YamunaWaterLevel #DelhiFloods #delhiflood #IndiAves #यमुना ?? pic.twitter.com/a01EzM49qt
— Dr. Monica (@monica722905) July 13, 2023
இடிந்து விழுந்த பாலத்தின் வீடியோ
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் இடைவிடாத மழையால் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இன்று பவுரியில் உள்ள ஒரு முக்கியமான பாலம் இடிந்து விழுந்தது.
மாலன் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரின் வேகம் அதிகரித்ததால், மாவட்டத்தை கோட்டுவார் சிகடியுடன் இணைக்கும் கான்கிரீட் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
பாலம் கோட்வார் சிகாடி-லால்தாங்-ஹரித்வார் வழித்தடத்தில் உள்ளதால், சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. குறைந்தபட்சம் 50,000 மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பாலம் சீரமைக்கப்படாவிட்டால் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு போராட வேண்டிய நிலை ஏற்படும்.
कोटद्वार में मालन नदी का पुल गिरा, नदी में पानी के तेज बहाव से हुआ हादसा
— Ajit Singh Rathi (@AjitSinghRathi) July 13, 2023
कई लोग बाल बाल बचे pic.twitter.com/zARPsUWBnu
இந்த வீடியோவை பார்க்கும் போது, பாலத்தின் நடுப்பகுதியின் ஒரு முனை தண்ணீரில் கிடக்கிறது. நதி அதைக் கடந்து தொடர்ந்து பாய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |