சோன்ஹார் சாலை பாலம் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதல்: வெளியான வீடியோ காட்சிகள்
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு கெர்சன் பகுதியில் உள்ள சோன்ஹார் சாலை பாலத்தை உக்ரைனிய படைகள் ஏவுகணைகள் கொண்டு தாக்கி அழிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
மூலோபாய பகுதி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் 15 மாத நிறைவில் தற்போது உக்ரைனிய வீரர்கள் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உக்ரைனிய படைகள் தொடங்கிய பதிலடி தாக்குதல் முறைகள் மூலம் இதுவரை 8 நகரங்களை ரஷ்ய படைகளிடம் இருந்து உக்ரைன் மீட்டெடுத்துள்ளது.
A video of the attack on the #Chongar bridge appeared. pic.twitter.com/m0FgupBP7b
— NEXTA (@nexta_tv) June 22, 2023
மேலும் சமீபத்தில் கிரிமியாவை ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இருக்கும் தெற்கு கெர்சன் பகுதியுடன் இணைக்கும் சோன்ஹார் சாலை பாலத்தை உக்ரைனிய ராணுவம் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் சாலை பாலத்தின் மையத்தில் மிகப்பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டு இருப்பதால் அவ்வழியாக மேற்கொள்ளப்பட்டு வந்த போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.
இந்த சோன்ஹார் சாலை பாலம் மூலமாக தான் ரஷ்ய படைகள் கிரிமியாவிற்கும் உக்ரைனின் பிற பகுதிகளுக்கும் ரஷ்ய படைகள் சென்று வந்தனர்.
தாக்குதல் வீடியோ
இந்நிலையில் சோன்ஹார் சாலை பாலம் மீது உக்ரைனிய ஆயுதப்படை நடத்திய ஏவுகணை தாக்குதல் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இந்த தாக்குதல் ஆக்கிரமிப்பாளர்களின் இராணுவ தளவாடங்களுக்கு ஏற்பட்டுள்ள அடி என உக்ரைன் பொறுப்பு கெர்சன் அதிகாரி யூரி சோபோலெவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |