ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் பதிலடி தாக்குதல்: உண்மையை ஒப்புக் கொண்ட ஜெலென்ஸ்கி
உக்ரைன் எதிர்பார்த்ததை விட மொதுவான பதிலடி தாக்குதலே அமைந்து இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளார்.
நிலைமை ஒப்புக் கொண்ட ஜெலென்ஸ்கி
15 மாத போர் நடவடிக்கையில் அதிகப்படியான ஆயுத கையிருப்பு உறுதிப்படுத்திய பின்னர் சமீபத்தில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிரான பதிலடி தாக்குதலை அறிவித்தார்.
இந்த பதிலடி தாக்குதலின் மூலம் 7 மாதங்களுக்கு பிறகு ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 8 உக்ரைனிய கிராமங்களை உக்ரைனிய ஆயுதப்படை மீட்டுள்ளது.
Anna Kudriavtseva/Reuters
இருப்பினும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நாங்கள் எதிர்பார்த்ததை விட பதிலடி தாக்குதல் மெதுவாகவே அமைந்து இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ள கருத்தில், சில மக்கள் பதிலடி தாக்குதல் என்பது ஹாலிவுட் படம் போன்றது என நம்பி உடனடி முடிவுகளை எதிர்பார்க்கின்றனர், ஆனால் அது அப்படி அல்ல, ஆபத்தில் இருப்பது மக்களின் உயிர்கள்.
எப்படி இருப்பினும் உக்ரைனிய படைகளால் ரஷ்யாவின் முக்கிய தற்காப்பு எல்லையை அடைய முடியவில்லை என்பதை ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Ukrainian Presidential Press Office via AP
கண்ணி வெடிகள்
ரஷ்ய படைகள் ஆக்கிரமித்து வைத்துள்ள உக்ரைனின் 77,220 சதுர மைல் பரப்பளவில் அதிகமான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன, இதனால் உக்ரைனிய படைகளின் உந்துதல் கடினமாக உள்ளது என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு அழுத்தம் தருவது சிலருக்கு தேவைப்படலாம், ஆனால் அனைத்து சிறந்த வழிகளிலும் போர்க்களத்தில் முன்னேறுவோம் என ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |