உக்ரைன்-ரஷ்யா போரால் ஜேர்மனியின் மக்கள்தொகை அதிரடியாக உயர்வு!
உக்ரேனிய அகதிகளின் வருகையால் ஜேர்மனியின் மக்கள்தொகை கடந்த ஆண்டு 1.3% அதிகரித்துள்ளது.
ஜேர்மனி மக்கள்தொகை உயர்வு
ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறிய ஏராளமான அகதிகள் கடந்த ஆண்டு ஜேர்மனியின் மக்கள்தொகையில் 1.3% அதிகரிப்புக்கு பெரும் பங்களித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும் ஜேர்மனியில் குடிமக்களின் எண்ணிக்கை 84.4 மில்லியனாக உயர்ந்துள்ளது.
Reuters
2022-ஆம் ஆண்டில் ஜேர்மனியின் மக்கள்தொகை 1.12 மில்லியன் மக்களால் அதிகரித்திருப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் செவ்வாயன்று அறிவித்தது. 2021 உடன் ஒப்பிடும்போது, இது 0.1% அல்லது 82,000 பேர் மட்டுமே அதிகமாகும்.
அனைத்து 16 ஜேர்மன் மாநிலங்களும் அதன் மக்கள்தொகை அதிகரித்திருப்பதாக அறிவித்தன. இதில் பெர்லின் மற்றும் ஹாம்பர்க் ஆகிய இரண்டு பாரிய நகரங்களில் மிகப்பெரிய அதிகரிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அங்கு 2.1% அதிகரித்துள்ளது.
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஆண்டு இறுதியில், 12.3 மில்லியன் மக்கள் வெளிநாட்டு குடியுரிமையுடன் ஜேர்மனியில் வாழ்ந்ததாக புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Reuters
இவர்களில் 1.34 மில்லியன் துருக்கிய குடிமக்கள், அவர்கள் பல தசாப்தங்களாக நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மையினராக உள்ளனர்.
உக்ரைனியர்கள் 1.05 மில்லியன்- இது 2021 உடன் ஒப்பிடும்போது 9,15,000 அதிகரிப்பு ஆகும்.
அவர்களுக்குப் பிறகு சிரியர்கள், 48,000 பேர் அதிகரித்துள்ளனர், இதனால் அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,83,000 மக்களை எட்டுகிறது.
ஒட்டுமொத்தமாக, ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனாக அதிகரித்து. அதே சமயம் ஜெர்மன் குடிமக்களின் எண்ணிக்கை 309,000 குறைந்துள்ளது.
இதன் விளைவாக, ஜேர்மன் பாஸ்போர்ட் இல்லாத மக்கள் தொகை விகிதம் 13.1% இலிருந்து 14.6% ஆக அதிகரித்துள்ளது.
Germany Population, Ukrainian Refugees, Russia-Ukraine War
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |