உக்ரைன் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்: 32 ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரேனிய படை
உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள் மீது இரவு முழுவதும் ரஷ்யா நடத்திய தாக்குதலில், 32 ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ராணுவ தளங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைனில் உள்ள கீவ் (Kyiv) மற்றும் லிவிவ் (Lviv) நகரங்களில் உள்ள ராணுவ தளங்கள் மீது ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதி மற்றும் அசோவ் கடலில் இருந்து ஏவப்பட்ட 35 ஷாஹித் ஏவுகணைகளில் (Shahed exploding drones) 32 ஏவுகணைகளை அழித்ததாக உக்ரேனியப் படைகள் தெரிவித்துள்ளன.
AP Photos
இருப்பினும், லிவிவ் நகரம் வான்வழி பாதுகாப்பு அமைப்பு (Air defense systems) இல்லாததால் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தது.
AP Photos
நான்கு மணி நேர ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா நான்கு மணி நேரம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்தார்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மீட்பதற்காக உக்ரைன் தனது எதிர்த்தாக்குதலை முடுக்கிவிட்டதிலிருந்து ரஷ்யாவின் மிகத் தீவிரமான தாக்குதல் இதுவாகும்.
AP Photos
ஷஹீத் ஏவுகணைகள் ஈரானிடம் இருந்து ரஷ்யாவால் வாங்கப்பட்டது. தென்கிழக்கு உக்ரைனில் உள்ள சபோரிஷியாவிலும் சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. சுமி பகுதியில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார்; 3 பேர் காயமடைந்தனர்.
AP Photos
Russia-Ukraine War, Drones, Ukraine Russia war
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |