18 மாதங்களுக்குப்பின் கணவருடன் இணையும் பிரித்தானிய மகாராணியார்

United Kingdom Queen Elizabeth II
By Balamanuvelan Sep 19, 2022 08:30 AM GMT
Report

2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் மரணமடைந்தார்.

இன்று மகாராணியாரின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.  

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, தன் காதல் மனைவி எலிசபெத்தை விட்டுப் பிரிந்தார் இளவரசர் பிலிப்.

அன்று தேவாலயத்தில், அருகில் ஆறுதல் கூறக்கூட யாரும் இல்லாமல் மகாராணி அமர்ந்திருந்த புகைப்படம் காண்போரைக் கண் கலங்கவைத்தது.

தன் கணவர் மீது தீராக் காதல் கொண்ட மகாராணி, அதற்குப் பின் வெளியே தான் உறுதியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், அவரது கணவருடைய பிரிவு அவருக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்ததை மறுப்பதற்கில்லை.


18 மாதங்களுக்குப்பின் கணவருடன் இணையும் பிரித்தானிய மகாராணியார் | The British Queen Who Joins Her Husband

Credit: Reuters

தன் கணவருடைய உடல் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக, விண்ட்சர் மாளிகையையே தனது வீடாக்கிக்கொண்டார் மகாராணியார்.

உடல் நிலை ஒத்துழைக்காவிட்டாலும்கூட, கடைசி வரை, அதாவது பிரித்தானியாவுக்கு ஒரு பிரதமரை பதவியிலமர்த்துவது வரை, தனது கடமைகளை செவ்வனே செய்து முடித்த மகாராணியார், கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, இயற்கை எய்திவிட்டார்.

18 மாதங்களுக்குப்பின் கணவருடன் இணையும் பிரித்தானிய மகாராணியார் | The British Queen Who Joins Her Husband

Credit: EPA

இந்நிலையில், கணவர் இறந்து 18 மாதங்களுக்குப் பிறகு, விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்திலமைந்துள்ள ராயல் வால்ட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள அவரது கணவருடைய உடலுக்கருகில் மகாராணியாரின் சவப்பெட்டி வைக்கப்பட உள்ளது.

அதன்பின், குடும்பத்தார் மட்டும் பங்கேற்கும் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின், மகாராணியார் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகிய இருவருடைய உடல்களும் மன்னர் ஆறாவது ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படும்.

தன் கணவருக்கு அருகில், தன் தந்தை மன்னர் ஆறாம் ஜார்ஜ், தாய் ராணி எலிசபெத், தங்கை இளவரசி மார்கரட் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆறாவது ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பது மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது.  

18 மாதங்களுக்குப்பின் கணவருடன் இணையும் பிரித்தானிய மகாராணியார் | The British Queen Who Joins Her Husband

Credit: Camera Press

18 மாதங்களுக்குப்பின் கணவருடன் இணையும் பிரித்தானிய மகாராணியார் | The British Queen Who Joins Her Husband

Credit: AFP

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US