மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்
உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் இடம் கொடுத்தார்கள் ஒரு பிரித்தானிய தம்பதியர்.
பத்தே நாட்களில் தன் மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, அந்த உக்ரைன் அகதியுடன் ஓட்டம் பிடித்துவிட்டார் அந்த பிரித்தானியர்.
இங்கிலாந்திலுள்ள Bradfordஇல் வாழும் Tony Garnett (29), Lorna (28) தம்பதியர், உக்ரைனிலிருந்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த Sofiia Karkadym (22) என்ற இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், Sofiiaவைப் பார்த்த உடனே Tonyக்கும், Tonyயைப் பார்த்த உடனே Sofiiaவுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போனதாம். Tonyயின் இரண்டு மகள்களுக்கும் கூட Sofiiaவைப் பிடித்துப்போக, பத்து வருடமாக Tonyயுடன் வாழ்க்கை நடத்து வந்த அவரது மனைவிக்கு மட்டும் Sofiiaவைப் பிடிக்கவில்லையாம்.
Tony ஸ்லோவேகிய மொழி தெரிந்தவர். Sofiia உக்ரைன் மொழி பேசுபவர். இரண்டு மொழிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்பதால், இருவரும் பேசிக்கொள்ள, Lornaவுக்கு அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியாமல் இருந்திருக்கிறது.
மொழி புரியவில்லை என்றால் என்ன, Lornaவுக்கு தன் கணவனைப் புரியுமே! ஆக, ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்ட Lorna, தன் கணவனும் Sofiiaவும் நெருக்கம் காட்டுவதையும், சேர்ந்து வெளியே சுற்றுவதையும் கவனித்து, அந்தப் பெண் ஏன் எப்போதும் உங்களுடனேயே சுற்றுகிறார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வீட்டுக்குள் உரசல் அதிகரிக்க, ஒரு நாள் இரண்டு பெண்களுக்கும் பயங்கர சண்டை வெடித்திருக்கிறது. இனி என்னால் இந்த வீட்டில் இருக்கமுடியாது என கண்ணீர் விட்ட Sofiia, பெட்டி படுக்கைகளை கட்ட, அவள் போனால் நானும் போகிறேன் என்று கூறிய Tony, தானும் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு மனைவியையும் மகள்களையும் விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த ஜோடி வேறொரு வீட்டில் புது வாழ்வைத் துவங்க இருக்கும் நிலையில், இனி என் வாழ்நாள் முழுவதையும் Sofiiaவுடன் தான் செலவிடுவேன் என்று கூறியுள்ளார் Tony.
அங்கே Lorna தன் பிள்ளைகளுடன் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்...
பிரித்தானியாவில், இன்னும் எத்தனை வீடுகளில் இதே நிலை ஏற்படப்போகிறதோ தெரியாது!