மறைந்த ரத்தன் டாடாவை போல ரூ.20,000 கோடியை நன்கொடையாக வழங்கும் தொழிலதிபர்.., யார் அவர்?
இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர் 20,000 கோடி ரூபாயை மக்கள் நலப்பணிகளுக்காக வழங்கியுள்ளார்.
யார் அவர்?
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை மக்கள் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் மக்களுக்கு வழங்கிய நன்கொடைகளும், சேவைகளும் தான்.
இந்நிலையில், ரத்தன் டாடாவின் வழியை பின்பற்றி வரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அபிஷேக் லோதா (Abhishek Lodha) 20,000 கோடி ரூபாயை மக்கள் நலப்பணிகளுக்காக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர், மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தில் லோதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக இருக்கும் பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கவுள்ளார்.
மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான மேக்ரோ டெக் டெவலப்பர்சின் சந்தை மூலதனம் ரூ.1.10 லட்சம் கோடி ஆகும். இதில் 72 சதவீத பங்குகளை லோதா குழுமம் கொண்டுள்ளது.
இந்த நிறுவனமானது லோதா என்னும் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியுள்ளது. தற்போது, நிறுவனத்தில் உள்ள 18 முதல் 19 சதவீத பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து அபிஷேக் லோதா கூறுகையில், "இதற்காக ஜனவரி மாதம் குழு நியமனம் செய்யப்படும் எனவும், கல்வி, பெண்கள் முன்னேற்றம் ஆகிய பணிகளுக்கு தேவையான உதவிகளை அறக்கட்டளை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பங்குகளில் கிடைக்கும் ஈவுத்தொகையும் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |