அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் டிரம்பின் கலவர கும்பல் எப்படி எளிதாக நுழைந்தார்கள்? உதவியது யார்? வெளியான பரபரப்பு வீடியோ
அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் எப்படி எளிதாக நுழைந்தார்கள் என கேள்வி எழுந்துள்ள நிலையில், அதை தௌவுப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்தில் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்தி கலவரத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். நாடாளுமன்ற கட்டடத்திற்குள் டிரம்ப் ஆரவாளர்கள் எப்படி எளிதான நுழைந்தாகர் என மக்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
இந்நிலையில், கேப்பிடல் கட்டடத்திற்குள் போராட்டகாரர்கள் நுழைய பொலிசார் உதவியது வீடியோவாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்து வீடியோவில், போராட்டகாரர்களுக்கு நாடாளுமன்றத்திற்குள் நுழையுன் கதவை பொலிசார் திறந்துவிட்டு அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
THEY LITERALLY JUST LET THEM THROUGH pic.twitter.com/tWMuchly8w
— ujungbits ONLY❍ (@jihanbit) January 6, 2021
அத்துடன் கட்டடத்திற்குள் நுழைந்த போராட்டகாரர்கள் பொலிஸ் அதிகாரியுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. எனினும், புகைப்படத்தின் உண்மை தன்னை கேள்விக்குரியாகவே உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலர் கதவை திறந்து விட்ட பொலிஸ் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.