தமிழக முதல்வரை விமர்சித்து பேசியதாக சீமான் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது: நீதிமன்றம் திட்டவட்டம்
சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கு தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ல் சீமான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக முதல்வர், அரசை விமர்சித்து பேசியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
அதை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
இந்த நிலையில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.