உக்ரைனில் பொதுமக்களை ரஷ்யா கொன்று குவிப்பதை வெளி உலகுக்கு தெரியப்படுத்திய பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்துள்ள கதி
உக்ரைனில் ரஷ்யப் படைகள் பொதுமக்களை கொன்று குவிப்பதை வெளி உலகுக்குத் தெரியப்படுத்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர், கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைனிலுள்ள மரியூபோல் நகரில் ரஷ்யப் படைகள் பொதுமக்கள் மீது நிகழ்த்திய அராஜகங்களைக் குறித்து செய்தி வெளியிட்டார் ரஷ்ய ஊடகவியலாளரான Maria Ponomarenko.
ஆனால், அவர் போலிச் செய்திகளை பரப்புவதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளை Maria நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் நிலையில், அதுவரை அவர் காவலில் அடைக்கப்பட்டிருப்பார் என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
சென்ற மாதம், போலிச் செய்திகளை பரப்புவோர் 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என ரஷ்யா நாடாளுமன்றம் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ள நிலையில், Maria நீண்ட காலம் சிறையில் செலவிடவேண்டி வரலாம் என அஞ்சப்படுகிறது.