நீங்கள் என்னை உயிருடன் பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்கலாம்: உக்ரைன் அதிபரின் சில்லிட வைக்கும் வார்த்தைகள்
ரஷ்யா உக்ரைனை கடுமையாகத் தாக்கி வரும் நிலையில், நீங்கள் என்னை உயிருடன் பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபரான Zelensky.
Zelenskyயை எப்படியாவது கொலை செய்ய ரஷ்ய சிறப்புப் படைகள் வேட்டையாடி வருவதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து, இந்த சில்லிட வைக்கும் வார்த்தைகளை வெளியிட்டுள்ளார் அவர்.
கான்ஃபரன்ஸ் அழைப்பு மூலம் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பேசியபோ,து இந்த அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்ட Zelensky, ரஷ்யாவுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளார்.
Kyivவில் தன்னையும் தன் குடும்பத்தையும் அழிக்க ரஷ்ய கொலைகாரர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், தான் அவர்களது முதல் இலக்கு என்றும், தன் மனைவியும் பிள்ளைகளும் இரண்டாவது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும், தான் பயந்து ஓடிவிடவில்லை, மக்களுடன் தலைநகரில்தான் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Zelenskyயின் மனைவியான Olena (44) மற்றும் 17 மற்றும் 9 வயதாகும் இரண்டு பிள்ளைகளும், மறைவிடம் ஒன்றில் ஆனால், உக்ரைனிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.