சசிகலா போட்டியிட முடிவு செய்திருக்கும் தொகுதி இது தானாம்! உச்ச கட்ட மகிழ்ச்சியில் உறவுகள்
சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, உசிலம்பட்டி, கோவில்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்பு மனு தாக்க செய்ய தயார் ஆகி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, சிறை தண்டனை காலம் முடிந்து சமீபத்தில் தமிழகம் திரும்பினார்.
சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிறை தண்டனை அனுபவித்த சசிகலாவால், இன்னும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது.
ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தன்னை தடுக்கிறதா என்பதை களத்தில் சோதித்து பார்க்க சசிகலா தீர்மானித்து விட்டதாக தினகரன் தரப்பு கூறியுள்ளது.
அப்படி, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், மாநில, மத்திய அரசுகள் ஒரு தியாக தலைவியை தடுத்து விட்டதாக பிரசாரம் செய்யலாம். ஏற்கப்பட்டால், இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று சசிகலா திட்டமிட்டுள்ளாராம்.
அதன் படி சசிகலா போட்டியிடுவது என்றால், உசிலம்பட்டி, கோவில்பட்டி தொகுதிகளை தெரிவு செய்துள்ளாராம்.
அங்கு முக்குலத்தோர் ஓட்டுகள் கணிசமாக இருப்பதுதான். அவர்கள் தனக்கு ஆதரவு தர தயக்க மாட்டார்கள் என, சசி நம்புகிறார். செய்தித் துறை அமைச்சர் ராஜு, இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி கோவில்பட்டி. உசிலம்பட்டியில், அ.தி.மு.க.,வின் நீதிபதி (பெயரே அதுதான்) எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.
மற்றொரு பக்கம், சசிகலாவின் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், வெற்றி நடை போடப்போகும் சின்னம்மா என்ற பேனர் ஏந்தி பயணம் போக இருக்கிறாராம்.
வரும், 24-ஆம் திகதி, ஜெயலலிதாவின், 73 வது பிறந்தநாள். மெரினா கடற்ரையில் இப்போது மூடி வைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடம், அன்று திறந்து விடப்படும். அங்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்னையில் இருந்து சசிகலா புறப்படவுள்ளார்.
மறுநாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரமா? மதுரையா என்பது முடிவாகவில்லையாம், ஆனால், தி.மு.க. என்ற தீயசக்தியின் கையில் மீண்டும் தமிழகம் போய்விட கூடாது என்பது, அவரது பிரசாரத்தின் மையம கருத்தாக இருக்கும் என்று கூறுகின்றனர்.