விதி வலியது... இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கரின் கூட்டாளியான பிரான்ஸ் நாட்டவரின் முடிவு
ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ஏற்பட்ட கோர முடிவே, அவரது கூட்டாளியான பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கும் ஏற்பட்டு, விதி வலியது என உணர்த்தியுள்ளது.
அமெரிக்கரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளையும் இளம்பெண்களையும் வேலை தருவதாக ஏமாற்றி சீரழித்து பலருக்கும் விருந்தாக்கி, அவர்களது வாழ்க்கையைச் சீரழித்தார்.
அதேபோல, பிரான்ஸ் நாட்டவரும், எப்ஸ்டீனின் கூட்டாளியுமான Jean-Luc Brunel (76) என்னும் நபரும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம்பெண்களையும் சிறுமிகளையும் எப்ஸ்டீனிடம் கொண்டு சேர்த்ததாக, பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள விர்ஜினியா ராபர்ட்ஸ் உட்பட இளம்பெண்கள் சிலர் குற்றம் சாட்டியிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு பிரான்ஸ் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார் Brunel.
இந்நிலையில், அவர் தனது சிறை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீனும் இதேபோல் தனது சிறை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது கூட்டாளியான Brunelம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, எப்ஸ்டீனின் நெருக்கமாக கூட்டாளியான கிஸலைன் மேக்ஸ்வெல் என்ற பெண்ணும் இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எப்ஸ்டீனும், Brunelம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்களது கூட்டாளியான மேக்ஸ்வெல்லுக்கும் அதே கதி ஏற்பட்டுவிடுமோ என அவரது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.