அர்ஜுன் டெண்டுல்கரின் கையை கடித்த நாய் - காயத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்
அர்ஜுன் டெண்டுல்கரின் கையை நாய் கடித்துள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கரின் கையை கடித்த நாய்
தற்போது 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று லக்னோவில் 63-வது லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
லக்னோ அணியில் இந்த ஆண்டு தான் சச்சின் டெண்டுர்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். இதுவரை அவர் லக்னோ அணிக்காக 4 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இடது கையால் பந்து வீசக்கூடியவர்.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில், அர்ஜுன் டெண்டுல்கர் நடந்து வருகிறார். அந்த அணி வீரர்கள் யுத்வீர் சிங் சரக் மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அவர்களிடம் தன் கையில் நாய் கடித்து விட்டதாக கூறுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து, நாய் கடித்து கையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அர்ஜுன் டெண்டுல்கர் இன்று நடைபெறும் போட்டியில் விளையாட தகுதியற்றவராகியுள்ளார்.
அவரை எந்த நாய் கடித்துள்ளது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. அவருடைய வளர்ப்பு நாய் கடித்து விட்டதாக கூறப்படுகிறது.
Mumbai se aaya humara dost. ?? pic.twitter.com/6DlwSRKsNt
— Lucknow Super Giants (@LucknowIPL) May 15, 2023