உயிரிழந்த பெரிய கோடீஸ்வரர்! பிரம்மச்சாரியாக மறைந்தவரின் கோடீக்கணக்கிலான சொத்துக்களுக்கு அதிபதியான நாய்.. ஆச்சரிய தகவல்
அமெரிக்காவில் உயிரிழந்த கோடீஸ்வரர் தனது கோடிக்கணக்கான சொத்துக்களை தனது செல்லப்பிராணி மீது எழுதி வைத்த நிலையில் அந்த நாய் தற்போது கோடீஸ்வரனாக மாறியுள்ளது.
Tennessee-ஐ சேர்ந்தவர் பில் டோரீஸ். கோடீஸ்வரரான இவர் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்தாண்டு பில் உயிரிழந்துவிட்டார்.
இறப்பதற்கு முன்னர் $5 மில்லியன் பணத்தை தான் வளர்த்த நாயான Lulu (4) பெயரிலான டிரஸ்டில் எழுதி வைத்திருக்கிறார். அதன்படி அந்த பணம் முழுவதும் நாய்க்கு தான் செலவிட வேண்டும்.
இது குறித்து நாயை தற்போது பராமரித்து வரும் மர்தா புர்டன் கூறுகையில், வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்த பில் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார்.
அவர் தனது நாய் Lulu மீது மிகவும் அன்பு வைத்திருந்த காரணத்தினாலேயே இந்த விடயத்தை செய்திருக்கிறார்.
$5 மில்லியன் பணத்தை Lulu மீது செலவழிக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதற்கு முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.
