பாஜக எம்எல்ஏ காரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச்செல்லப்பட்டதால் பரபரப்பு! தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ் எச்சரிக்கை
அசாம் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமான காரில் மின்னணு வாக்குப்பதிவு எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தலை நடத்தவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, மார்ச் 27ம் திகதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்றது, அதைத்தொடர்ந்து நேற்று ஏப்ரல் 1ம் திகதி 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
ஏப்ரல் 6ம் திகதி கடைசி மற்றும் 3வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏ கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமான காரில் மின்னணு வாக்குப்பதிவு எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Breaking : Situation tense after EVMs found in Patharkandi BJP candidate Krishnendu Paul’s car. pic.twitter.com/qeo7G434Eb
— atanu bhuyan (@atanubhuyan) April 1, 2021
குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட வைரலாகியுள்ளது. வீடியோவில் வெள்ளை நிற காருக்குள் மின்னணு வாக்குப்பதிவு இருப்பதை காட்டுகிறது, குறித்த கார் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமானது என மக்கள் கூறிகின்றனர்.
குறித்த வீடியோவை பகிர்ந்த அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, மின்னணு வாக்குப்பதிவு இயந்தரங்களை வெளிப்படையாக கொள்ளையடித்து மோசடி நடப்பதை உடனடியாக தடுக்க வேண்டும்.
இல்லையெனில் காங்கிரஸ் கட்சி தேர்தலை புறக்கணிக்கும் என ரிபும் போரா எச்சரக்கை விடுத்துள்ளார்.