மூன்று திருமணம் செய்து கொண்டவர்! பிரபல நடிகர் காலமானார்
கனடாவை சேர்ந்த பிரபல நடிகர் கிறிஸ்டோபர் பிளம்மர் தனது 91வது வயதில் காலமானார்.
கனடாவின் ரொறன்ரோவை சேர்ந்த பிளம்மர், 1958-ல் ஸ்டேஜ் ஸ்டிரக் என்கிற படத்தினால் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
பிளம்மருக்கு மூன்று முறை திருமணமாகியுள்ளது.
தி சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் கேப்டன் வான் டிராப் வேடத்தில் நடித்ததன் மூலம் பிளம்மர் பெரும் புகழ் பெற்றார்.
2019-ல் வெளியான தி லாஸ்ட் ஃபுல் மெஸர், இவர் நடித்த கடைசிப் படம். 60 வருடங்களாகத் திரையுலகில் நீடித்து வந்த பிளம்மர், 2010-ல் நடித்த பிகினர்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் அவர் மரணமடைந்துள்ளார்.
பிளம்மரின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.