மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது: வருவதை யாராலும் தடுக்கமுடியாது
மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர்.
உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவாளரான Anatoly Wasserman என்பவர், உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதலைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

Image: POOL/AFP via Getty Images
அடுத்த மூன்று மாதங்களில் ஆபத்தான விடயங்கள் எதுவும் நடக்க இருப்பதாக மக்கள் இன்று பார்க்கவில்லை என்றாலும், அடுத்து நடக்கப்போவது யாருக்கும் தெரியாது என்று கூறும் Wasserman, அது அமெரிக்காவுடனோ அல்லது எந்த நேட்டோ உறுப்பு நாட்டுடனோ ரஷ்யா மோதும் நேரடி மோதலாக இருக்காது என தான் நம்புவதாகத் தெரிவிக்கிறார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்கிறார் Wasserman.

Image: Anadolu via Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |