அமெரிக்காவில் Omicron வைரஸுக்கு முதல் நபர் பலி
அமெரிக்காவில் Omicron வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் பலியாகியுள்ளார்.
தனது 50 வயதுகளிலிருக்கும் ஒருவரே, அமெரிக்காவில் Omicron வகை மரபணு மாற்ற வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முதல் நபராகியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள Harris என்ற பகுதியில் வாழும் ஒருவரே Omicron வகை கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளார்.
அந்த நபருடைய பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு ஏற்கனவே வேறு சில உடல் நலப் பிரச்சினைகளும் இருந்துள்ளன. Regeneron antibody therapy என்ற சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை, டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் Harris என்ற இடத்தின் நீதிபதியாகிய Lina Hidalgo என்பவர், நேற்று (திங்கட்கிழமை) இரவு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இது கவலைக்குரிய ஒரு செய்திதான் என்றாலும், அதே நேரத்தில், தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவே என்பதும் உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
அமெரிக்காவில் முதல் நபர் Omicron வகை கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதே நேரத்தில், அமெரிக்காவில், Omicron வகை கொரோனா வைரஸ் மற்ற வகை கொரோனா வைரஸ்களை முந்திவிட்டது என்னும் தகவலை, அமெரிக்க நோய்த் தடுப்பு மையமும் உறுதி செய்துள்ளது.
அந்த மையத்தின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களில் 73 சதவிகிதத்தினர் Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.