பெண் என்று நினைத்து ஆவியுடன் பேசிக்கொண்டிருந்த விமான பணிப்பெண்... புல்லரிக்கவைக்கும் ஒரு சம்பவம்
எமிரேட்ஸ் ஏர்லைன்சில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய இளம்பெண் ஒருவர், தனது பணிக்காலத்தின்போது தான் சந்தித்த அனுபவங்களை வீடியோக்களாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
அவை பிரபலமாகிவருகின்றன. Sandra Kwon (38) என்னும் அந்தப்பெண்ணை ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் 400 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளன.
Sandra விமானத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, பெண் ஒருவரிடம் சென்று, உங்களுக்கு ஏதாவது அருந்த தேவையா? நீங்களும் உங்கள் கணவரும் எதுவுமே சாப்பிடவில்லையே என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்தப் பெண், என் கணவர் ஒரு வார உழைப்புக்குப் பின் மிகவும் களைப்பாக இருக்கிறார். அவரை எழுப்பவேண்ட்டாம். ஆனால், அவர் எழுந்ததும் அவருக்கு கிரீன் டீ மட்டும் கொடுங்கள். அவருக்கு கிரீன் டீயில் பாலும் சர்க்கரையும் சேர்த்தால்தான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
அதேபோல், அந்த கணவர் எழுந்ததும் அவருக்கு கிரீன் டீ கொண்டு கொடுத்திருக்கிறார் Sandra.
உங்கள் மனைவி உங்களுக்கு கிரீன் டீ கொடுக்கச் சொன்னார் என்று Sandra கூற, என் மனைவி கூறினாரா, கிரீன் டீயில் பாலும் சர்க்கரையும் சேர்த்தீர்களா? என அவர் வரிசையாக கேள்விகளை அடுக்க, ஓ, தவறாக செய்துவிட்டேனா, உங்கள் மனைவி அப்படித்தாக் சொன்னார் என்று கூற, உடனே, அந்த நபர், என் மனைவி இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்று கூற, அதிர்ச்சியடைந்திருக்கிறார் Sandra.
ஆம், அவர் இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது, அவரது உடலை நான் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்கிறேன். அவரது உடல் இந்த விமானத்தில் சரக்குகள் வைக்கும் இடத்தில் இருக்கிறது என்று அந்த நபர் கூற, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் Sandra.
ஆக, தான் பெண் என்று நினைத்து ஆவியுடன் பேசிக்கொண்டிருந்ததாக Sandra குறிப்பிட, வீடியோவைப் பார்த்தவர்கள் தங்களுக்குப் புல்லரித்துப்போனதாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.