190 பயணிகளுடன் பயணித்த விமானம்: தரையிறங்கும்போது ஏற்பட்ட பயங்கரம்
அமெரிக்காவில், 190 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது பயங்கர விபத்தொன்றை சந்தித்தது.
விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட பயங்கர விபத்து
சனிக்கிழமையைன்று, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Harry Reid சர்வதேச விமான நிலையத்தில், Frontier ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.
அப்போது விமானிகள் அறையில் திடீரென புகை உருவானதுடன், விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் டயர்கள் வெடித்துள்ளன.
Image: @TylerHerrick/Twitter
மேலும், விமானத்தின் வலது எஞ்சினில் தீப்பிடித்துள்ளது. உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு வாகனங்கள், நுரையைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்துள்ளன.
விடயம் என்னவென்றால், விமானத்தில் 190 பயணிகளும் 7 பணியாளர்களும் இருந்துள்ளார்கள். என்றாலும், யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் தரையிறங்கும்போது தீயும் புகையும் உருவாவதைக் காட்டும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |