அமேசான் நிறுவனரை பற்றி இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா?
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவர் அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்.
அவரது வாழ்க்கை வரலாற்றில், தந்தை என்ற இடத்தில் இரண்டு ஆண்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனித்துள்ளீர்களா?
அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் வாழ்க்கை வரலாறு குறித்து விக்கிபீடியாவில் பார்த்தால், அவரது பெற்றோர் என்ற இடத்தில் இரண்டு ஆண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.
அதில், பெற்றோர்: Ted Jorgensen, Miguel Bezos, Jacklyn Bezos என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன் பின்னணியில் ஒரு சோகக்கதை உள்ளது.
Photo: @denver_patriot
ஆம், பதின்ம வயதில் இருந்த டெட் (Ted Jorgensen) மற்றும் ஜாக்கி (Jackie Gise) என்னும் தம்பதியருக்குப் பிறந்தவர் ஜெஃப் பெசோஸ். அவர் பிறந்து ஒரு ஆண்டு ஆனதுமே அவரது தாயாகிய ஜாக்கி விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.
விவாகரத்தானபின் Miguel Bezos என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் ஜாக்கி. Miguel ஜெஃப் பெசோஸைத் தனது மகனாக தத்தெடுத்துக்கொள்ள, இனி தங்கள் வாழ்வில் குறுக்கிடவேண்டாம் என தனது முதல் கணவரும் ஜெஃப் பெசோஸின் தந்தையுமான டெட்டை கேட்டுக்கொண்டார் ஜாக்கி.
ஜாக்கியின் கோரிக்கையை சீரியஸாக எடுத்துக்கொண்ட டெட், அவர்களுடைய வாழ்விலிருந்து மொத்தமாக ஒதுங்கிக்கொண்டார்.
இதற்கிடையில், ஜெஃப் பெசோஸ் வளர்ந்து உலகின் செல்வந்தர்களில் ஒருவராக, அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் ஒருவர் ஒருமுறை டெட்டை தேடிச்சென்று சந்தித்தபோதுதான் தனது மகன் உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவர் என்பதை தெரிந்துகொண்டிருக்கிறார் டெட்.
ஆனால், ஜெஃப் பெசோஸுக்கு டெட்தான் தனது தந்தை என்று தெரியுமாம். ஆனாலும், அவர் தன் தந்தையைச் சென்று சந்திக்கவேயில்லை.
தனது வாழ்வின் கடைசி நேரத்தில் ஜெஃப் பெசோஸை சந்திக்க விரும்பினாராம் டெட். ஆனால், சோகமான விடயம் என்னவென்றால், ஜெஃப் அப்போது கூட தன் தந்தையை சந்திக்க மறுத்துவிட்டாராம்.