நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற இளம்பெண்: கண்ட திகில் காட்சியால் அலறியடித்து ஓட்டம்
பிரித்தானியாவில், நள்ளிரவில் கழிவறைக்குச் சென்ற பெண் ஒருவர் தான் கண்ட காட்சியால் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
Stourbridge என்ற இடத்தில் வாழும் Laura Tranter (34), நள்ளிரவில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்குள் ஒரு பாம்பு இருப்பதைக் கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்திருக்கிறார்.
உதவிக்கு Sarah என்ற ஒரு தோழியை அழைத்தால், அவர் Laura குடித்துவிட்டு உளறுவதாக எண்ணியிருக்கிறார். பிறகு பாம்பு பிடிப்பவர்களை அழைத்தால், அவர்கள் காலையில்தான் வரமுடியும் என்று கூறியிருக்கிறார்கள்.
கடைசியாக Sarahவின் சகோதரரான Dan நண்பரை அழைக்க, Dan தனது நண்பரான Steveஐ அழைக்க, பிறகு அவர்கள் இருவரும் வந்து அந்த பாம்பைப் பிடித்திருக்கிறார்கள்.
அந்த பாம்பின் உருவம் இன்னமும் என் கண் முன்னாலேயே நிற்கிறது. அந்த எண்ணத்திலிருந்து விடுபட முடியவில்லை என்கிறார் Laura.