உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நேரலையில் குரல் கொடுத்த இளம்பெண் செய்தியாளருக்கு மேக்ரான் அளித்துள்ள நற்செய்தி
ரஷ்யாவில், உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நேரலையில் தொலைக்காட்சியில் குரல் கொடுத்த இளம்பெண் செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புகலிடம் அளிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முன்வந்துள்ளார்.
நேற்று முன்தினம், ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில், நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, திடீரென, ’போரை நிறுத்துங்கள், ரஷ்ய அரசு கூறுவதை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் செய்தி வாசிப்பவரின் பின்னால் தோன்றினார் ஒரு இளம்பெண்.
அவரது பெயர் Marina Ovsyannikova. அவர் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் எடிட்டர் ஆவார்.
இந்நிலையில், Marina மாஸ்கோவிலுள்ள Ostankino நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மீது அங்கீகாரமற்ற பொது நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு 30,000 ரூபிள்கள் அபராதமும், 10 நாட்கள் சிறை அல்லது சமூக சேவை தண்டனையாக அளிக்கப்படலாம் என்றும் BBC செய்தி வெளியிட்டுள்ளது.
Absolutely astonishing. During Russian Channel 1’s evening news broadcast, a woman ran onto the set with a sign: “No war…Don’t believe the propaganda. They’re lying to you here.” pic.twitter.com/wBdFGtzTsg
— Steve Rosenberg (@BBCSteveR) March 14, 2022
இதற்கிடையில், உக்ரைன் அகதிகள் மையம் ஒன்றைப் பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் Marinaவுக்கு உதவும் என்று கூறியுள்ளார். ஆனால், Marina நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மேக்ரானுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை.
Marinaவின் பாதுகாப்புக்காக நாங்கள் தூதரகம் வாயிலாகவோ அல்லது புகலிடம் வழங்கும் அமைப்பு மூலமாகவோ தூதரக ரீதியில் நடவடிக்கைகளைத் துவக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார் மேக்ரான்.
தற்போது தான் அவ்வப்போது ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசி உரையாடல்கள் வாயிலாக தகவல் பரிமாற்றம் செய்துவரும் நிலையில், இந்த விடயம் குறித்து புடினுடன் பேச இருப்பதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
Les Français ont massivement répondu présents pour aider et accueillir les réfugiés ukrainiens, par une aide humanitaire ou un hébergement. Le portail https://t.co/mmZYcNGFnP a déjà reçu près de 33 000 offres. Pour cet élan de solidarité : merci.
— Emmanuel Macron (@EmmanuelMacron) March 15, 2022