வழுக்கை தலையை மறைக்க விக் வைத்த மாப்பிள்ளை! சரமாரியாக தாக்கிய பெண் வீட்டார்
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திருமண விழாவின் போது மணமகன் ஒருவர் வழுக்கை தலையை மறைக்க விக் வைத்திருந்தது அம்பலமானதால் மணமகளின் வீட்டாரால் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வழுக்கை தலையை மறைக்க விக்
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், டோபி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜவுரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அப்போது, அங்கு திருமண விழாவின் போது 'செஹ்ரா' என்னும் மணமகன்கள் தலைக்கவசம் அணியும் பாரம்பரிய முறை கடைபிடிப்பது வழக்கம். அப்போது, மொட்டை தலையை மறைக்க மணமகன் விக் வைத்ததது பெண் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.
இருப்பினும், மணப்பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகமடைந்து அவரது தலைமுடியை இழுத்ததால் அவரது வழுக்கைத் தலை வெளிப்பட்டது.
மணமகனை தாக்கிய மணமகள் வீட்டார்
வழுக்கை தலையை மறைக்க மணமகன் விக் வைத்திருப்பது தெரியவந்ததும் மணமகள் வீட்டார், அவரை தாக்கியுள்ளனர். அப்போது, மணமகன் கைகளைக் கூப்பியபடி கெஞ்சுகிறார். ஆனால், மணப்பெண்ணின் குடும்பத்தினர் கருணை காட்டாமல், அவரை தொடர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
गया में पोल खुलने पर गंजे दूल्हे की जमकर धुनाई, नकली बाल लगाकर दूसरी शादी रचाने पहुंचा था शख्स। डोभी थाना अंतर्गत बजौरा गांव का है मामला। वीडियो सोशल मीडिया पर वायरल।#Gaya #ViralVideo #Bihar #BiharPolice pic.twitter.com/rGgvlkah8z
— Bihar Tak (@BiharTakChannel) July 11, 2023
மணமகன் மன்னிப்பு கேட்டு, மீண்டும் மீண்டும் கைகளை மடக்கி, மன்னிப்பு கோரினார். எனினும், ஒரு சிலர் தலையிட்டு நிலைமையை அமைதிப்படுத்திய போதிலும் அங்கிருந்தவர்கள் மன்னிக்கும் மனநிலையில் இல்லை.
மேலும், அந்த மணமகனுக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆன நிலையில், இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பது மணமகள் வீட்டாருக்கு மேலும் கோபத்தை தூண்டியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |