தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதால் மனைவியை கொன்றுவிட்டு கணவர் எடுத்த விபரீத முடிவு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவன் மனைவியை துப்பாக்கியில் சுட்டு கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், காஜியாபாத்தில் வாழ்ந்து வந்த ரியல் எஸ்டேட் டீலர் குல்தீப் தியாகி (46). இவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற நாளில் வீட்டில் இருந்த அவரது 2 மகன்களும் துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தங்களது அம்மாவையும், அப்பாவையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து குல்தீப் தியாகி வீட்டில் கடிதம் ஒன்றை பொலிஸார் கண்டனர்.
அக்கடிதத்தில், "நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இது பற்றி எனது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது. என்னால் நீண்ட காலம் வாழவும் முடியாது.
அதே சமயத்தில் என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. என் மனைவியுடன் கடைசி வரை இருப்பேன் எனக் கூறியதால் என் மனைவியை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.
இது என்னுடைய தனிப்பட்ட முடிவு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, துப்பாக்கியை பறிமுதல் செய்த பொலிஸார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |