ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரின் மகளை திட்டித் தீர்த்த மக்கள்: வீடியோ வெளியிட்டு மறைமுகமாக செய்த விடயம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரின் மகளை சமூக ஊடகங்களில் மக்கள் திட்டித் தீர்த்துள்ளார்கள்.
ஆனால், தானும் உக்ரைனுக்கு ஆதரவுதான் என்பதை, வீடியோ ஒன்றை வெளியிட்டு சொல்லாமல் சொல்லிவிட்டார் அவர்.
ரஷ்யாவில் நீண்ட காலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் Sergey Shoigu. அவரது மகள் Ksenia Shoigu (31).
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே ரஷ்ய செல்வந்தர்கள், அதிகாரிகள் மட்டுமின்றி அவர்களது பிள்ளைகளையும் மக்கள் திட்டி வருகிறார்கள்.
பல்வேறு ரஷ்யர்களின் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 'Z' என்ற அடையாளத்தை அணிந்துகொண்டோ, விளம்பரப்படுத்தியோ வருகிறார்கள். ஆனால், Kseniaவுக்கு அதில் உடன்பாடு இல்லை போலிருக்கிறது.
ஆகவே, உக்ரைன் நாட்டுக் கொடியிலுள்ள மஞ்சள் மற்றும் நீல நிறங்களில், தானும் தன் ஆறு மாதக் குழந்தையுமாக உடை அணிந்து சமூக ஊடகம் ஒன்றில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஆனால், அவர் மறைமுகமாக உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தும், மக்களுக்கு அவர் மீது அன்போ, பரிதாபமோ வரவில்லை!
இப்போதும் சமூக ஊடகங்களில் Kseniaவை கடும் வார்த்தைகளால் மோசமாக திட்டுகிறார்கள் மக்கள்.
நீயும் ஒரு தாய்தானே, உக்ரைனில் சில குழந்தைகள் ஆறு மாதங்கள் கூட வாழவில்லை, உன் தந்தை அவர்களை சவக்குழிக்கு அனுப்பிவிட்டார்.
உன் தந்தை சாகட்டும்.
உங்கள் தந்தைகள் செய்த பாவத்தை உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அனுபவிக்கட்டும் என்றெல்லாம் கடுமையாக சாபமிட்டு வருகிறார்கள் மக்கள்!