உலகுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை அளித்துள்ள இஸ்ரேல் தடுப்பூசி திட்டம்: வெளியாகியுள்ள நல்ல செய்தி
இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பூசி திட்டம் உலகுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேல் மற்ற நாடுகளைக் காட்டிலும் பரபரப்பாக கொரோனா தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றி வருவதை உலகறியும். தனது மக்கள் தொகையில் 20 சதவிகிதத்தினருக்கு அது முதல் டோஸ் தடுப்பூசி போட்டாயிற்று. இந்நிலையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, அது கொரோனா அறிகுறிகளை மட்டுமின்றி 50 சதவிகிதம் கொரோனா தொற்றையும் தடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு 14 நாட்களுக்குள், அது கொரோனா தொற்றை 50 சதவிகிதம் தடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர் ஒருவர் வெளியிட்டுள்ள இந்த தகவல், முழு உலகுக்கும் தடுப்பூசி குறித்த ஒரு நம்பிக்கை கீற்றை உருவாக்கியுள்ளது.
அதே நேரத்தில், நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் தலைவரான Dr. Sharon Alroy-Preis, இந்த ஆய்வு ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்றும், ஆகவே, இன்னமும் பாதுகாப்பாக இருப்பது நல்லது, அதுவும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கவனமாக இருப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.