கனடாவில் 140,000 டொலர்கள் மதிப்புடைய காருடன் மாயமான நபர்... கார் எங்கே?
கனடாவில், 140,000 டொலர்கள் மதிப்பிலான பி எம் டபிள்யூ கார் ஒன்றை கடனுக்கு வாங்கிய நபர் ஒருவர், காருடன் மாயமானதால் விற்பனையாளர் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்.
ஒன்ராறியோவிலுள்ள கார் டீலர் ஒருவரிடமிருந்து Dong Li (26) என்பவர், 15,000 முன்பணம் செலுத்தி 140,000 டொலர்கள் மதிப்பிலான பி எம் டபிள்யூ கார் ஒன்றை கடனுக்கு வாங்கியுள்ளார்.
கார் வாங்கி சில நாட்களுக்குள் அந்த கார் ஒன்ராறியோவிலிருந்து Richmondஇலுள்ள கிடங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தனது முதல் தவணையை Li செலுத்தாத நிலையில், அவரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் பொய்யான தகவல்களைக் கொடுத்தது தெரியவந்தது.
வெறும் 15,000 டொலர்கள் செலுத்தி காரை எடுத்துக்கொண்டு Li தலைமறைவான நிலையில், மீதமுள்ள 129,000 டொலர்களை எப்படி மீட்பது என்று தெரியாமல் திகைத்த கார் டீலர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, உடனே அந்த காரை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். காரை பறிமுதல் செய்ய நீதிபதியின் உத்தரவு இருந்தும், கார் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் திகைத்துபோயிருக்கிறார் டீலர்.
ஏற்கனவே இதே போல் ஒரு வழக்கில் கார் ஒன்று சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இந்த காரும் சீனாவுக்கு கொண்டு செல்லப்படுவதற்காக கண்டெய்னர் ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.