பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள முக்கிய இரயில் நிலையம் மூடல்! வெளியான அறிவிப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரில் இருக்கும் மெட்ரோ இரயில் நிலையம் ஒன்று இரண்டு மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின், பாரிசில் உள்ள முக்கிய மெட்ரோ இரயில்நிலையமான la station Jourdain நிலையம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.
11-ஆம் இலக்க மெட்ரோ சேவைகளின் விரிவாக்க பணிகளை அடுத்தே இந்த நிலையம் மூடப்படுகின்றது.
வரும், பெப்ரவரி 2 ஆம் திகதி, அதாவது இன்று முதல் இந்த நிலையம் மூடப்படுவதாக இரயில் நிறுவனமான RATP அறிவித்துள்ளது.
விரிவாக்க பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வரும் ஏப்ரல் 12-ஆம் திகதி திறக்கப்படும் எனவும், இந்த 11-ஆம் இலக்க மெட்ரோ விரிவாக்கல் பணி Rosny-Bois-Perrier (Seine-Saint-Denis) நிலையம் வரை விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.