பிரான்சில் திங்கட்கிழமை அமுலுக்கு வரும் முக்கிய மாற்றம்
பிரான்ஸ் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்திவரும் நிலையில், அடுத்த கட்ட கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் அமுலுக்கு வர உள்ளது.
எப்போது?
பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை, அதாவது 28.2.2022 அன்று, மாஸ்க் அணியும் கட்டுப்பாட்டை நெகிழ்த்த இருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
எங்கெல்லாம்?
திங்கட்கிழமை முதல், எங்கெல்லாம் மக்கள் தடுப்பூசி பாஸை காட்டவேண்டியிருந்ததோ, அங்கெல்லாம் மாஸ்க் அணியத்தேவையில்லை. அதாவது, உணவகங்கள், மதுபான விடுதிகள், காபி ஷாப்கள், பனிச்சறுக்கு லிப்ட்கள், திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள், பெரிய நிகழ்ச்சிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நூலகங்களுக்குச் செல்வோர் இனி, அதாவது பிப்ரவரி 28 முதல் மாஸ்க் அணியத்தேவையில்லை.
ஆனாலும், எங்கெல்லாம் தடுப்பூசி பாஸ் தேவையில்லையோ, உதாரணமாக, கடைகள் மற்றும் பணித்தலங்களில், கட்டிடங்களுக்குள் மக்கள் மாஸ்க் அணியத்தான் வேண்டும்.
அத்துடன், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதும் நீண்ட தூர பயணத்தின்போதும் மாஸ்க் அணியத்தான் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.