1,400 டொலர் காசோலைக்காக குடும்பத்தையே கொன்று குவித்த நபர்: கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்
அமெரிக்காவில், பெண் ஒருவருக்கு அரசு வழங்கிய நிதியுதவிக்கான காசோலையை தராததற்காக, அவரது குடும்பத்தில் நான்கு பேரை சுட்டுக்கொன்றுள்ளார் அந்த பெண்ணின் கணவர்.
இண்டியானாவைச் சேர்ந்த Malik Halfacre (25), தனது மனைவியான Jeanettrius Mooreக்கு அரசு வழங்கிய 1,400 டொலர்களுக்கான காசோலையைக் கேட்டு கலாட்டா செய்திருக்கிறார்.
அவரது மனைவியான Moore, தான் மட்டுமே கஷ்டப்பட்டு உழைப்பதாகவும், Malik எந்த வேலையும் செய்வதுமில்லை என்றும் கூறி அவருக்கு அந்த காசோலையை தர மறுத்துள்ளார்.
பிறகு, வேண்டுமானால் 450 டொலர்கள் தருகிறேன் என்று அவர் கூற, Malik, எப்படியாவது அந்த பணத்தை நான் அடைகிறேனா இல்லையா பார் என்று சொல்லிவிட்டு கோபமாக சென்றிருக்கிறார்.
மறுநாள் துப்பாக்கியுடன் வீடு திரும்பிய Malik, துப்பாக்கியை எடுத்து வீட்டுக்குள்ளிருந்தவர்களை தாறுமாறாக சுட்டிருக்கிறார்.
சுட்டுவிட்டு, தனக்கும் Mooreக்கும் பிறந்த ஆறு மாதக் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.
அவர் சுட்டதில், Mooreஇன் ஏழு வயது மகள், தம்பி, உறவினர் மற்றும் தாய் ஆகியோர் உயிரிழக்க, முதுகில் குண்டு பாய்ந்த Moore வீட்டுக்கு வெளியே ஓடி, அக்கம்பக்கத்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார்.
மக்கள் பொலிசாரை அழைக்க, Moore மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மறுநாள், மற்றொரு வீட்டில் தனது குழந்தையுடன் பதுங்கியிருந்த Malikஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1,400 டொலர்களுக்காக ஒருவர் நான்கு பேரை கொன்று குவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



