கனடாவிலுள்ள வீடு ஒன்றிற்கு வருகை புரிந்த நெதர்லாந்து இளவரசி: பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல்
நெதர்லாந்து இளவரசியான Margriet, கனடாவின் தலைநகரான Ottawaவுக்கு வருகை புரிந்துள்ளார்.
நெதர்லாந்து ராஜ குடும்பம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டூலிப் மலர்களை கனடாவுக்கு அனுப்புவதுண்டு.
அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு உள்ளது. அதாவது, 1944-1945ஆம் ஆண்டுகளில், நெதர்லாந்தின் விடுதலைக்காக கனேடியர்கள் போராடியுள்ளார்கள். அப்படி போராடியதில் 7,600 கனேடியர்கள் உயிர்த்தியாகமும் செய்துள்ளார்கள். அதற்கு நன்றிக் கடனாகத்தான் ஆண்டுதோறும் நெதர்லாந்து ராஜ குடும்பம் ஆயிரக்கணக்கான டூலிப் மலர்களை கனடாவுக்கு அனுப்பி வருகிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விடயம், நெதர்லாந்து இளவரசியான Margriet, Ottawaவில்தான் பிறந்துள்ளார். ஆம், இரண்டாம் உலகப்போரின்போது நெதர்லாந்து ராஜ குடும்பம் நாஸிக்களிடமிருந்து உயிர்தப்ப கனடாவுக்கு ஓடிவந்துள்ளது. அப்போது, Ottawaவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் Margriet பிறந்துள்ளார்.
ஆகவே, தான் பிறந்தபோது தங்கள் குடும்பம் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று அங்கு டூலிப் மலர்ச்செடிகளை நட்டுள்ளார் Margriet.
அந்த வீடு தற்போது கனடாவின் எதிர்க்கட்சித் தலைவருடைய வீடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.