சுவிட்சர்லாந்துக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: சுவிஸ் அரசு எடுத்துள்ள நடவடிக்கை...
சுவிட்சர்லாந்துக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆகவே, அகதிகளுக்கான தங்குமிடங்களை அரசு திறந்துள்ளதுடன், தேவைக்கேற்ப மேலும் பல இடங்களை ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
சுவிட்சர்லாந்துக்குள் ஏராளமான அகதிகள் வந்துகொண்டே இருப்பதால், அவர்களுக்கான தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது.
இந்த ஆண்டு இறுதிவாக்கில் 19,000 புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் என்றும், மேலும் 80,000 முதல் 85,000 பேர் வரை உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்தை வந்தடைவார்கள் என்றும் சுவிஸ் அரசு எதிர்பார்க்கிறது.
image - Keystone / Michael Buholzer
ஆகவே, பெடரல் புலம்பெயர்தல் அலுவலகம், மூட்டப்பட்டுள்ள தங்குமிடங்களை தற்காலிகமாக திறந்துள்ளதுடன், புதிய தங்குமிடங்களையும் திறந்துவருவதாக பெடரல் புலம்பெயர்தல் அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று, வட சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள Aargau மாகாணத்தில், உக்ரைன் அகதிகளுக்காக தங்குமிடம் ஒன்று திறக்கப்பட உள்ளது.
இப்படியே தேவைக்கேற்ப பல தங்குமிடங்களை அகதிகளுக்காக திறக்கவும் திடமிடப்பட்டு வருகிறது.