சர்வதேச பொலிசாரால் தேடப்பட்ட நபர்... பிரித்தானிய மகாராணியாரின் அருகில் அனுமதிக்கப்பட்டது எப்படி: பாதிக்கப்பட்ட நபர் கேள்வி

UK British Queen Man chased by Interpol
By Balakumar Mar 27, 2021 10:18 AM GMT
Report

கனடாவின் ரொரன்றோவில் வாழ்ந்துவந்த ஒரு சிறுவன் ஒருநாள் கடத்தப்பட்டான்.

அவனைக் கடத்தியது வேறு யாருமல்ல, அவனைப் பெற்ற தந்தையான Curtis Hooper என்பவர்தான்! Hooper தன் சொந்த மகனை ரொரன்றோவிலிருந்து கடத்திக்கொண்டு, தான் பழகிவந்த Teri என்ற பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டார்.

திருமணமாகி மூன்று வாரங்களிலேயே தனது கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது பின்னர் தெரியவந்ததாக அவரது மனைவியான Carol தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல், Hooperஐ வலைவீசித் தேடிக்கொண்டிருந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் குழந்தை Jasonஉடன் Teri சிக்க, Hooper அப்போதும் தப்பிவிட்டார்.

மகனைக் கடத்தியதற்காகவும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காததற்காகவும் தொடர்ந்து சர்வதேச பொலிசார் Hooperஐ தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட Hooper ஒரு ஓவியரும் கூட... ஆகவே, பிரித்தானிய மகாராணியாரிடமிருந்து Hooperக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

மகாராணியார் தன்னை ஒரு ஓவியமாக வரைய சம்மதம் தெரிவித்து, Hooperக்கு கடிதம் எழுதியுள்ளார், மகாராணியாரின் அப்போதைய தனிச் செயலராக இருந்த Robert Fellowes. அதன்படி, 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி பக்கிங்காம் மாளிகைக்கு சென்ற Hooper, மகாராணியாரின் உருவம் மிகச்சரியாக வரவேண்டும் என்பதற்காக அவரை சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுத்துள்ளார்.  

Hooper மகாராணியாரின் படத்தை வரைந்துமுடித்தபின், ராஜ குடும்பத்தினருடன் அவருக்கு விருந்தும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேடப்பட்டுவந்த ஒரு குற்றவாளியை எப்படி பக்கிங்காம் அரண்மனைக்குள், மகாராணியாரின் அருகே அனுமதித்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் Hooperஇன் மகனான Jason (50).

தனது தந்தை ஒரு மோசமான மனிதர் என்றும், பெற்ற பிள்ளையைக் கைவிட்டுச் சென்றதால் அவர் மீது தனக்கு இன்னமும் கோபம் உண்டு என்றும் கூறுகிறார் Jason.

அவர் தனக்கு பிள்ளைகள் இருப்பதையே கனடாவில் வாழும் தனக்கு நெருங்கிய நண்பர்களிடமிருந்துகூட மறைத்திருந்தாலும், அவரது படைப்புகள் ப்ளோரிடாவில் ஓரிடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற நிலையில், அவரது கலைப் படைப்புகள் உண்மையாகவே பாராட்டப்படவேண்டியவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார் Jason.

ஆகவே, Hooperஇன் படைப்புகளைக்கொண்டு விரைவில் ஒரு கலைக்கண்காட்சி நடத்த இருக்கிறார் Jason. என்றாலும், எப்படி இப்படி ஒரு குற்றவாளியை மகாராணியாரின் அருகில் அனுமதித்தீர்கள் என்று கேட்டு பிரித்தானிய அரண்மனைக்கு அவர் எழுதிய கடிதத்துக்கு இன்று வரை பதில் இல்லையாம்!  

GalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US