iPhone டெலிவரி செய்த நபரை கொன்ற கொடூரம்! சிசிடிவியில் சிக்கிய குற்றவாளி
கர்நாடக மாநிலத்தில் iPhone டெலிவிரி செய்ய வந்த நபர் ஐ-போனுக்கான தொகையைக் கேட்டதற்காக அவரை கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் எரித்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ஹேமந்த் தத் என்ற நபர் flipkart மூலம் ஐ-போன் ஆர்டர் செய்துள்ளார்.
அதனை e-kart எனும் டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் ஹேமந்த் நாயக் என்பவர் பிப்ரவரி 7 ஆம் தேதி டெலிவிரி செய்ய வந்துள்ளார்.
டெலிவிரி செய்ய வந்த அந்த நபர் ஐ-போனுக்கான தொகையைக் கேட்க அதை தர மறுத்த ஹேமந்த் தத் அந்த நபரைப் பல தடவை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்
ஹேமந்த் நாயக்கை காணவில்லை என அவரது சகோதரர் ஆன மஞ்சு நாயக் என்பவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் காவல் துறையினர் விசாரணையைத் துவங்கியுள்ளனர். விசாரணையில் ஹேமந்த் நாயக் கடைசியாக டெலிவிரி செய்யப்போன வீட்டு முகவரியை வைத்து ஹேமந்த் தத்தை விசாரித்துள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காணொளியில் ஹேமந்த் தத் தனது இருசக்கர வாகனத்தில் ஹேமந்த் நாயக்கின் உடலை போர்வையால் போர்த்திக் கொண்டு தூக்கி செல்வது பதிவாகியுள்ளது.
பெட்ரோலை ஊற்றி உடலை எரித்த ஹேமந்த் தத்
இதனிடையே ஹேமந்த் தத்தின் வீட்டின் அருகே இருந்த ரயில் தண்டவாளத்தின் அருகே உடலை எரித்திருப்பதற்கான சாம்பல்கள் கிடைக்க, காவல் துறையினர் ஹேமந்த் தத்தை விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவர் ஹேமந்த் நாயக்கைத் தான் கொலை செய்ததாகவும் மூன்று தினங்கள் பிணத்தை வீட்டில் வைத்து விட்டு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகப் பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.